ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது ஜெகதம்பா பகுதி. இங்கு வசித்து வருபவர் சிராவணி இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குண்டூரை சேர்ந்தவர் இவரது கணவர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே வாழ்க்கையை நடத்தி வந்தனர்.. ஆனால், திடீரென தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் வெடித்தன. இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து 2 பேருமே பிரிந்துவிட்டனர். சிராவணி சில மாதங்கள் கோவாவில் உள்ள தன்னுடைய சொந்தக்காரர் வீட்டில் வசித்து வந்தார். பிறகு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, விசாகப்பட்டினம் வந்தார். அங்குள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கோபாலகிருஷ்ணா என்ற இளைஞருடன் சிராவணிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
கோபாலகிருஷ்ணா ஒரு ஓவியர். பரவாடாவை சேர்ந்தவர். இருவருமே நெருங்கி பழகினார்கள். ஒருகட்டத்தில் தனியாக வீடு எடுத்து லிவிங் டூ கெதர் முறையில் ஒன்றாக வாழ ஆரம்பித்தனர்.த இவர்களது வாழ்வும், சிலநாட்கள் மகிழ்ச்சியாகவே கழிந்தது.. இப்படிப்பட்ட சூழலில், சிராவணியின் நடத்தை மீது திடீரென கோபால கிருஷ்ணாவுக்கு சந்தேகத்தை கொடுத்து உள்ளது. சிராவணி, மற்ற ஆண்களுடன் நெருங்கி பழகி வந்து உள்லார். இது, கோபாலகிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை.இதனால் இருவருக்குள்ளும் தகராறு வெடித்தன. பலமுறை கோபால கிருஷ்ணா கண்டித்துள்ளார். ஆனாலும், சிராவணி ஆண் நண்பர்களிடம் பேசுவதை விடவில்லை. தொடர்ந்து அவர்களிடம் பழகி வந்ததாகவே கூறப்படுகிறது. அதில் முக்கியமான நபர் வெங்கி என்பவர். இவருடன்தான் சிரோமணி மிக நெருக்கமாக பேசி வந்தாராம். அதனால், இவரது பெயரை குறிப்பிட்டே, அவருடன் பழகக்கூடாது என்று கோபாலகிருஷ்ணா பலமுறை எச்சரித்திருக்கிறார். இதையும் சிராவணி பொருட்படுத்தவில்லை. செல்போனில் மெசேஜ் மூலமாக வெங்கியுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். இதை பார்த்த கோபாலகிருஷ்ணா ஆத்திரம் அடைந்ததுடன், சிராவணியை கொலை செய்யவும் முடிவு செய்துள்ளார். அதன்படி, சிராவணியிடம், பேசி விசாகப்பட்டினம் கடற்கரை ரோட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கிருக்கும் கோகுல் பார்க் என்ற பகுதிக்கு நள்ளிரவு 2 மணிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த இடத்திற்கு சென்றதுமே, வெங்கியுடன் பழகுவது குறித்து சிராவணியிடம் கேட்டுள்ளார். இதில், மறுபடியும் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. வெங்கியுடன் தொடர்ந்து பழகுவேன் என்று சிரவாணி உறுதியா சொல்லவும், அவரது கழுத்தை கொடூரமாக நெரித்தார் கோபால கிருஷ்ணன். இதில், சிரஅவாணி துடிதுடித்து இறந்துவிட்டார். இதற்கு பிறகு, கோபாலகிருஷ்ணா, தானாகவே மகாராணி பேட்டை போலீசுக்கு சென்று, சரணடைந்துவிட்டார்.. தன்னை போலவே, வேறு ஆண்கள் சிரவாணியால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, கொலை செய்துவிட்டதாக வாக்குமூலமும் கொடுத்துள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணாவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.