நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில் … ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்களை பரிந்துரைத்துள்ளோம். டில்லியில் வேட்பாளர் பட்டியல் முடிவு செய்யப்பட்டு இன்று இரவுக்குள் அறிவிக்கப்படும் என்றார்.
10 தொகுதிகளின் வேட்பாளர்கள் யார் யார்?.. காங்கிரஸ் பட்டியல் இன்று இரவுக்குள் வெளியாகும்…
- by Authour