பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் கீழ் வரும் 2024-25 ம் ஆண்டிற்கான 17 சங்கங்களின் புதிய நிர்வாகிகள் கோவை சுந்தராபுரம் லிண்டாஸ் மகாலில் நடந்த விழாவில் பதவி ஏற்று கொண்டனர்..
விழாவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மகாகவி பாரதி மண்டல தலைவர் லயன் செந்தில் குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் 3 வது வட்டார தலைவர் மீனா குமாரி,9 வது வட்டார தலைவர் மோகன் ராஜ்,20வது வட்டார தலைவா் கர்ணன்,21 வது வட்டார தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்தனர்.
விழாவில் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்ட ஆளுநர் டாக்டர் நித்யானந்தம் துவக்கி வைத்து,
சிறப்புரையாற்றினார்..
முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நேரு நகர் அரிமா சங்கத்தின் தலைவர் கனலி என்கிற சுப்பு வரவேற்று பேசினார்..
17 சங்கத்தின் புதிய உறுப்பினர்களை முன்னாள் ஆளுநர் டாக்டர் சாரதா மணி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார்..
இதனை தொடர்ந்து சி.எஸ்.ஆர்.சவுத் தலைவர் மற்றும் முன்னாள் ஆளுநர் ராம்குமார் புதிய நிர்வாகிகளிடம் உறுதி மொழியை ஏற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக முன்னால் ஆளுநர்கள் டாக்டர் பழனிசாமி,டாக்டர் ஜீவானந்தம்,கருணாநிதி மற்றும் முதல் துணை நிலை ஆளுநர் ராஜசேகர் இரண்டாம் துணை ஆளுநர் செல்வராஜ் மற்றும் கேட் ஒருங்கிணைப்பாளர் சூரிய நந்தகோபால் ஆகியோர் சேவை திட்டங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்..