வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியான மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் தேஜ் புயல் வட மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதனிடையே தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென்மேற்கு- தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடற்பரப்பில் அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது நாளை அல்லது மறுநாள் புயலாக வலுவடையக் கூடும் என்கிற எதிர்பார்க்கபடுகிறது.