சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கோவிலங்குளத்தில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை, தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை தென் தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 17-19 வரை மேற்குத் தொடர்ச்சி மலை, தென் மாவட்டங்கள், டெல்டா, வட உள் தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மே 18-ல் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுளள்து. 19-ல் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.