தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல் திருப்பூர்,
கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், நாளை (புதன்கிழமை) தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வருகிற 23-ந் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (புதன்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த தாழ்வு பகுதி, வருகிற 24-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
