சிவகங்கையில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தவர் முருகன். இவர் 2015ம் ஆண்டு அந்த பள்ளியில் படிக்கும் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தார். இதுபற்றி சம்பந்தப்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்ட போக்சோ கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. அதில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை(49வருட சிறை) தண்டனையும் ரூ.69 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 6 பேருக்கும் அரசு சார்பில் மொத்தம் ரூ.29 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பை கேட்டதும் முருகன் கண்ணீர் விட்டு அழுதார்.