Skip to content

அரியலூர் தொழிலாளி கொலை: 2 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இறந்தவருக்கு சீர் செய்யும் தகராறு ஏற்பட்ட கொலையில், குற்றம் சாற்றப்பட்ட எட்டு பேருக்கு ஆயுள்சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி(65) ,   ஓய்வுபெற்ற ரயில்வே தொழிலாளி. இவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன்(59) என்பவரது குடும்பத்தினருக்கும்  கழிவு நீர் செல்வது தொடர்பாக  தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 17.05.2020 அன்று ரவிச்சந்திரன் (59), த/பெ பெருமாள், ஆரியன்(31) த/பெயர் சேகர், கபிலன்(30) த/பெயர் சேகர், அரவிந்தன்(27) த/பெயர் ரவிச்சந்திரன், பவித்ரன்(28) த/பெயர் சேகர், குருசாமி(54) த/பெயர் பரமசிவம், கலா(47)க/பெ குருசாமி, வளர்மதி (50) க/பெ சேகர் ஆகியோர் சட்டவிரோதமாக கந்தசாமியின் வீட்டில் நுழைந்து,

கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து கந்தசாமியின் மகன் காட்டு ராஜா(42) அளித்த புகாரின் அடிப்படையில், செந்துறை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு எட்டு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

குற்றவாளிகள் எட்டு பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து அனைவரும் போலீசாரின் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

error: Content is protected !!