திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியை சேர்ந்த சின்ன காளி மகன் பரமசிவம் (35) திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர் நாடகக் கலைஞராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 13.4.2012 ஆம்பூர் பகுதியில் நாடகம் போடச் சென்றுள்ளனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் மகள் ஜெயப்பிரதா (15) பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவரை ஆசை வார்த்தைக்கு கூறி கடத்திச் சென்று புதூர்நாடு பகுதி கம்பு குடியில் வைத்து முகத்தை சிதைத்து கொலை செய்து பெண்ணிடமிருந்து தங்க நகை மற்றும் 6000 பணத்தை பறித்துச் சென்றுள்ளார்.
இது குறித்து ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் ஜெயப்பிரதாவின் தந்தை ஜனார்த்தனன் புகார் அளித்தார் புகாரின் பேரில் சின்னகாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் பரமசிவன் பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணை கொலை செய்தது உறுதியானதன் காரணமாக ஆயுள் தண்டனை மற்றும் 10,000 அபதாரம் கட்ட தவறினால் ஒரு வருடம் கூடுதல் சிறை தண்டனை விதித்து நீதிபதி மீனாகுமரி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் பி.டி.சரவணன் வாதாடினார்..