அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அண்ணாநகர் முதல் தெருவில் வசித்த பெ.ராஜேந்திரன் மற்றும் ஆண்டாள் ஆகியோரின் மகள் கனகவள்ளிக்கும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த செந்தில்குமாரவேல் S/O.செல்வராஜ் என்பவருக்கும் ஆன்லைன் மூலம் தகவல் தெரிந்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 05.02.18ம் தேதி காரைக்குடியில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண பேச்சு வார்த்தையின் போது ஆண்டாளும் அவரது கணவர் ராஜேந்திரனும் சம்மந்தி கலாவதி யிடம், நாங்கள் எங்கள் பெண்ணுக்கு 25 பவுன் போட்டு திருமணம் செய்து கொடுக்கிறோம் என சொன்னப்போது, மாப்பிள்ளை
செந்தில்குமாரவேலின்
தாயார் கலாவதி, தம்பி ஹரிகிருஷ்ணவேலு, அண்ணன் மகன் முருகன் ஆகியோர்கள் சேர்ந்து கொண்டு வரதட்சணையாக மேலும் 10 பவுன் சேர்த்து 35 பவுனும், இருசக்கர வாகனம் வாங்குவதற்கு பணமும் கூடுதலாக கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு ஆண்டாளும் அவரது கணவர் ராஜேந்திரனும் திருமணம் முடியட்டும் நாங்கள் நல்ல சூழ்நிலைக்கு வரும்போது நீங்கள் வரதட்சணையாக கேட்கும் 10 பவுனையும், இருசக்கர வாகனம் வாங்குவதற்கு பணமும் கொடுத்து விடுகிறோம் என்று சொல்லி திருமண சீர்வரிசையாக 25-சவரன் தங்க நகைகள், ரூபாய் 2.50.000-/- ம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் திருமண செலவில் பாதி தொகையான ரூபாய் 2.50.000-/-ம் பணம் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு செந்தில்குமாரவேலு, தனது மனைவி கனகவள்ளியிடம்
வரதட்சணையாக 10 பவுனும், இருசக்கர வாகனம் வாங்குவதற்கு பணமும் கொடுக்க சொல்லி சித்தரவதை செய்து, அடித்து கொடுமை படுத்திவருவதாக கனகவள்ளி தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே போனில் சொல்லியுள்ளார். இதை போனில் கேட்ட கனகவள்ளியின் தகப்பனார் ராஜேந்திரன் கனகவள்ளியை பார்ப்பதற்கு சென்னைக்கு சென்றபோது கனகவள்ளியின் வீட்டில் அந்த நேரத்தில் காரைக்குடியில் இருந்து வந்திருந்த செந்தில்குமாரவேல், அவரது தாயார் கலாவதி, தம்பி ஹரிகிருஷ்ணவேலு, அண்ணன் மகன் முருகன் அனைவரும் சேர்ந்து கொண்டு கனகவள்ளியின் தகப்பனார் ராஜேந்திரனை தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளால் திட்டி, ஏளனமாக பேசி அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி, வரதட்சணை
வந்தால்தான் உன் பெண்ணை பார்க்கலாம் என்று அசிங்கப்படுத்தி வீட்டைவிட்டு வெளியே அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குள் கடந்த 28.04.2018-ம் தேதி அதிகாலை 04.00 மணியளவில் வாதியின் மகள் கனகவள்ளியை செந்தில்குமாரவேலு அரியலூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுட்டு, வரதட்சணை யுடன் வந்தால் சென்னை வீட்டிற்கு வா இல்லையென்றால் வராதே என்று சொல்லி, பேருந்து நிலையத்திலேயே ராஜேந்திரனிடம் விட்டுட்டு சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கனகவள்ளியின் தகப்பனார் ராஜேந்திரன் மனமுடைந்து அதனால் ஏற்பட்ட வேதனையில் 12.05.18 ம்தேதி மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.
மனமுடைந்து தனது தகப்பனார் இறந்த காரணத்தினால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கனகவள்ளி திருமணமாகி 4-மாதமே ஆன நிலையில் “என் தந்தை சாவுக்கு காரணம் ஆனவர் என் கணவர் செந்தில்குமாரவேலு, அவரது குடும்பத்தினர் தான் காரணம். என்னிடம் வரதட்சணை அடிக்கடி கேட்டு என்னை துன்புறுத்துவர். இதை கேட்ட என் தந்தை மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். மேலும் என்னிடம் தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். இனியும் நான் செந்தில்குமாரவேலு உடன் வாழ மாட்டேன். எனவே என் சாவுக்கு காரணம் செந்தில்குமாரவேலு அவரது குடும்பத்தினர் தான் காரணம் என் தந்தை போன இடத்திற்க்கே நானும் செல்கிறேன்” என்று கடிதம் எழுதி வைத்தும். தனது செல்போனில் வாய்ஸ் ரெக்காடிங் செய்து வைத்துவிட்டும் 13.06.2018-ம் தேதி தனது தாய்வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் துப்பாடாவில் தனக்குதானே தூக்கிட்டுகொண்டு இறந்து விட்டார். இச்சம்பவம் குறித்து கடக வள்ளியின் தாயார் ஆண்டாள் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் சட்டப்பிரிவுகள் 304(B)IPC r/w 4-of Dowry Prohibition Act 1961-ன் பிரிவுகளை வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வலக்கானது அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை அளித்து வாதத்தை முன் வைத்தார்.
இதனையடுத்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த மகிளா நீதிமன்ற நீதிபதி செல்வம், குற்றம் சாட்டப்பட்ட கனகவள்ளியின் கணவர்
செந்தில்குமாரவேல் அவரது தாயார் தம்பி ஹரி கிருஷ்ணன் அண்ணன் மகன் முருகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், வரதட்சணை கொடுமைக்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.