Skip to content
Home » காதலியுடன் சேர்ந்து வாழ கணவனை தீர்த்து கட்டியவருக்கு 2 ஆயுள் தண்டனை….திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

காதலியுடன் சேர்ந்து வாழ கணவனை தீர்த்து கட்டியவருக்கு 2 ஆயுள் தண்டனை….திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

வேலூர் மாவட்டம் கட்டுப்பட்டி அடுத்த பாளையத்தை சேர்ந்த அமல்ராஜ் என்பவரது மகன் ஜான் பிரின்ஸ்(25) இவர் சென்னை கோடம்பாக்கம் செட்டிநாடு ஆஸ்பத்திரியில் செவிலியராக வேலை செய்து வந்தார். இதே ஆஸ்பத்திரியில் கன்னியாகுமரி மாவட்டம்  கல்லுவிளை கிராமத்தை சேர்ந்த அஜிதா(25) என்பவரும் நர்சாக வேலை செய்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கருதினர்.

இந்த நிலையில்  அஜிதாவின் பெற்றோர் அவருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த  ஜெகனஸ்பாபு(30) என்பவரை 2016ல் திருமணம் செய்து வைத்து விட்டனர். ஆனால் அஜிதாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.  கணவனுடன் வேண்டா வெறுப்பாக சில நாட்களை கடத்தினார்.

கணவனை கொன்றால் தான் நாம் சேர்ந்து வாழ முடியும் என கருதிய அஜிதா இதுபற்றி தனது காதலனிடம் கூறினார். அதன்படி அவர்கள் இருவரும் சேர்ந்த சதி திட்டம் தீட்டினர்.  அதன்படி  காதலன் ஜான் பிரின்ஸ், தன்னை செட்டிநாடு ஆஸ்பத்திரியின் டாக்டர் என அறிமுகம் செய்து போனில் பேசினார். தன்னால் திருமணத்திற்கு வரமுடியவில்லை.  நாகர்கோவில் வரும்போது உங்களை வந்து பார்க்கிறேன் என்று கூறி உள்ளார். அதன்படி நாகர்கோவில் போய் அவரது கிராமத்திற்கும் போய் சந்தித்து உள்ளார்.

பின்னர் சென்னை திரும்புவதாக கூறிய  ஜான் பிரின்ஸ், தன்னோடு திருச்சி வரை ரயிலில் வரும்படி  ஜெகனஸ்பாபுவை அழைத்தார்.  அவரும் அதற்கு ஒத்துக்கொண்டு புறப்பட்டார்.7.7.16ல் அவர்கள் புறப்பட்டனர்.

நள்ளிரவில் திருச்சி ரயில் நிலையத்தில் ஜான் பிரின்சும்ஜெகனஸ் பாபுவும் இறங்கி குறுக்கு வழியில் வீட்டுக்கு செல்லலாம் என்று திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து பொன்மலை ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் இடையே உள்ள முடுக்குப்பட்டி பாலத்திற்கு கீழே ஜெகனஸ் பாபு அழைத்து செல்லும் போது
ஜெகனஸ் பாபு சந்தேகம் அடைந்து அஜிதாவிடமும் போனில் பேசியுள்ளார்.

அஜிதா அப்போதும் தனது கணவரான ஜெகனஸ் பாபுவிடம் அந்த வழியாக தான் டாக்டர் சொக்கலிங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி உள்ளார்..

தனது மனைவி அஜிதாவின் பேச்சை நம்பி சென்ற ஜெகனஸ் பாபுவை, ஜான் பிரின்ஸ் தான் வைத்திருந்த கைக்குட்டையால் கழுத்தை நெரித்தும், அவரது தலையை  கற்களில் மோதியும் கொலை செய்தும்… ஜெகனஸ் பாபு இறந்த பிறகு அவர் அணிந்திருந்த
7 பவுனை நகைகளை அபகரித்து கொண்டு உடலை தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு இறந்து போல வைத்து விட்டு ஜான் பிரின்ஸ் சென்றுவிட்டார்.

தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீசார்  முதலில் ரயில் பயணம் செய்து தவறி விழுந்த அடையாளம் தெரியாத நபர் என்று நினைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் பெற்று
வழக்கு பதிவு செய்யது விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஜெகனஸ் பாபுவின் தந்தை செல்வம் கொடுத்த சந்தேக தகவலின் அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அஜிதா மற்றும் ஜான் பிரின்ஸ் ஆகியோரது செல்போன்கள் பேச்சை போலீசார் அய்வு செய்தனர். அப்போது ஜெகனஸ்பாபு கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

அதைத்தொடர்ந்து ஜான் பிரின்ஸ், அஜிதா ஆகியோரை கைது செய்தனர்.  ஜான் பிரான்சிஸ் வீட்டில் இருந்து ஜெகனஸ் பாபு அணிந்திருந்த நகைகளை கைபற்றினர்.அப்போதைய திருச்சி ரயில்வே இன்ஸ்பெக்டர் கோசலைராமன் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தார்.  இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாபு முன்னிலையில் நடந்து வந்தது. இதற்கிடையே அஜிதா  தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஜான் பிரின்ஸ்சுக்கு  கொலை,  கூட்டு சதிக்காக இரட்டை ஆயுள் தண்டனையும், கொலை செய்யும் நோக்குடன் ஆள் கடத்தலுக்கு 10 ஆண்டு சிறையும்,  தடயங்களை மறைத்ததற்கு மூன்று ஆண்டுகளும், கொலை செய்த பிறகு பிணத்தில் இருந்த நகைகளை திருடியதற்கு மூன்று ஆண்டுகளும், தண்டனை விதித்து நீதிபதி பாபு தீர்ப்பளித்தார்.  தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக  சவரிமுத்து   சிறப்பாக வாதாடினார்.  திருச்சி இருப்புப்பாதை காவல் நிலைய  பெண் தலைமை காவலர்ஆயிஷா பேகம்  சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற விசாரணையின் போது அரசு வழக்கறிஞருடன் திறம்பட பணியாற்றினார்.

வழக்கினை திறமையாக நடத்தியவர்களை திருச்சி ரயில்வே  எஸ்.பி  அதிவீரபாண்டியன், டிஎஸ்பி பிரபாகரன்  ஆகியோர் பாராட்டி வெகுமதி வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *