Skip to content

அன்னைத்தமிழைக் காக்க உறுதி ஏற்போம்…. எம்பி கனிமொழி பதிவு..

  • by Authour

உலக தாய்மொழி தினத்தையொட்டி ஆதிக்க திணிப்புகளுக்கு அஞ்சாமல் அன்னைத்தமிழைக் காக்க உறுதியேற்போம் என திமுக மக்களவை எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X-தளபதிவில் கூறியதாவது;

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!
தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!

உயிராக, வாழ்வியல் நெறியாக, அறமாக, சினமாக, சிந்தனை மொழியாக, அறிவியல் வழியாக, தமிழரின் தனிப்பெரும் உணர்வாக, உலக மொழிக்கெல்லாம் ஒளி‌தரும் செம்மொழியாக உதிரத்தில் கலந்துவிட்ட தாய்த்தமிழை போற்றி வணங்கிடுவோம். ஆதிக்க திணிப்புகளுக்கு அஞ்சாமல் அன்னைத்தமிழைக் காக்க உறுதியேற்போம் என்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!