சேலம் கொண்டலாம்பட்டி அரச மரத்து காட்டூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளி பட்டறை தொழிலாளியின் மனைவி கவிதா(பெயர் மாற்றப்பட்டு உள்ளது). 25 வயது இருக்கும். இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டு ஆகியும் குழந்தை இல்லை . இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஓவியா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவர் கணவருடன் வசித்து வந்தார். ஓவியாவுக்கு30 வயது . 3 குழந்தைகள் உள்ளனர்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ற முறையில் காவியாவும், ஓவியாவும் நன்றாக பழகி வந்தனர். கணவர்கள் வேலைக்கு சென்றதும், இருவரும் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். நாளடைவில் இவர்களது நெருக்கம் அதிகமானது. பெண்கள் தானே பழகுகிறார்கள் என்று அவர்களது கணவன்மார் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த சூழலில் காவியா வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்கு சென்றார். ஓவியாவும் வெள்ளிப்பட்டறை வேலைக்கு போனார். ஓவியா தனது 3 குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை விட பொம்மியுடன் இருக்கும் நேரமும் நெருக்கமும் அதிகமானது. இருவரின் அதிகப்படியான அன்பு நாளடைவில் லெஸ்பியன் உறவாக மாறியது. அடிக்கடி ஊர் ஊராக சுற்றி லெஸ்பியன் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவரம் மெல்ல இருவரது கணவர்களுக்கும் தெரியவந்தது. இருவீட்டிலும் மனைவியை கண்டித்தனர். ஆனாலும் அவர்களது பழக்கம் தொடர்ந்தது. இதனால் காவியாவின் கணவர் வீட்டை காலி செய்து விட்டு திம்மநாயக்கன்பட்டி என்ற கிராமத்துக்கு குடி பெயர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி ஓவியா திடீரென வீட்டிலிருந்து மாயமானார். அவரது கணவர் பல இடங்களில் தேடியும் உறவினர்களிடம் விசாரித்தும் அவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை . அப்போது வீட்டில் படுக்கை அறையில் ஓவியா கைப்பட எழுதிய கடிதம் இருந்தது. அதனுடன் தாலியும் இருந்தது. கடிதத்தில் எனக்கு கணவருடன் வாழ பிடிக்க வில்லை. அதனால் தான் தாலியை கழட்டி வைத்திருக்கிறேன். நான் எனக்கு பிடித்த காவியாவுடன் செல்கிறேன் என்னை யாரும் தேட வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து ஓவியாவை தேடி வந்தார். அதேவேளையில் காவியாவையும் காணவில்லை என அவரது கணவரும் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஒரே நேரத்தில் மாயமான 2 பேரையும் தேடி கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 பெண்களையும் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் 2 பெண்களுக்கு இடையேயான லெஸ்பியன் உறவும், ஏற்கனவே ஒரு முறை அவர்கள் ஊரைவிட்டு ஓடியதும் தெரியவந்தது. இரு வீட்டாரும் அவர்களை அழைத்துவந்து அறிவுரைகள் கூறினர்.ஓவியாவின் வீட்டில் அவருக்கு புத்திமதி கூறியதோடு 3 குழந்தைகள் எதிர்காலம் கருதி நடந்து கொள் என்று கண்டித்தனர். இந்த சூழலில்தான் மீண்டும் அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டு ஓட்டம் பிடித்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் எங்கு உள்ளனர்? என்பது குறித்து அவர்களது செல்போன் எண்களை வைத்து தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். விரைவில் அவர்கள் எங்கிருந்தாலும் மீட்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். அதேவேளையில் தங்களது தாயை காணாமல் செல்வியில் 3 குழந்தைகளும் கதறி அழுதபடி தவித்து வருகிறார்கள்.