மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் உள்ளிட்ட பகுதிகளில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த 2ம் தேதி புகார் எழுந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், தேடுதல் வேட்டையை, வனத்துறையினர் துவக்கினர். மேலும் ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், களப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் கேமராக்கள் அமைத்தும், ட்ரோன் பயன்படுத்தியும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டது. ஒருமுறை கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. அதன்பின், அதன் நடமாட்டம் பதிவாகவில்லை. சிறுத்தையின் எச்சம், சிறுநீர், காலடித்தடம் ஆகியவற்றின் அடிப்படையில், அதன் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் உறுதி செய்யப்படாததால் அது
அரியலுார், பெரம்பலுார் பகுதிகளுக்கு சென்று இருக்கலாம் என கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக சிறுத்தை பெரம்பலுாருக்கு சென்று இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம் அடைந்தனர். ஆனால், 10 நாட்களுக்கும் மேலான தேடுதல் வேட்டையில் சிறுத்தையின் நடமாட்டம் குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. தற்போது அரியலூர் மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.. ,