நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில் உள்ள தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட ஒற்றுவயல் கிராமத்தில் நுழைந்த சிறுத்தை குடியிருப்பு பகுதியிலும் விவசாயத் தோட்டங்களிலும் நடமாடியது. சிறிது நேரம் கழித்து பாக்குத் தோப்புக்குள் சென்று படுத்து ஓய்வெடுத்துள்ளது.
அதே சிறுத்தை தேவா்சோலை பகுதியில் உள்ள தேவன் எஸ்டேட் சாலையில் 2வது நாளும் நடமாடியது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாா்த்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
வனத்துக்குள் செல்லாமல், தொடா்ந்து ஊருக்குள் நடமாடுவதால் சிறுத்தைக்கு உடல் நலம் குன்றியிருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.