கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூர், அரண்மனை காடு தோட்டத்தில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியம் (60) . இவருக்கு சொந்தமான மாடு மற்றும் கன்றுகுட்டிகளை இரவில் தென்னந்தோப்பில் வழக்கம் போல கட்டி வைத்திருந்தார்.
நேற்று முன் தினம் காலையில் வந்து பார்த்தபோது கன்றுக்குட்டியின் வயிற்று பகுதி குதரிய நிலையில் இறந்து கிடந்தது.மேலும் அருகில் இறந்து கிடந்த கன்றுக்குட்டி அருகே சிறுத்தை கால் தடம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியம்
மற்றும் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர் இதுகுறித்து வடக்கிபாளையம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.. சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட வனத்துறையினர் கன்றுக்குட்டி அருகில் இருக்கும் கால்தடத்தை ஆய்வு செய்தனர் அப்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தை
கண்காணிப்பதற்காக இறந்த கன்று குட்டியின் உடலை அப்புறப்படுத்தாமல் அதே இடத்தில் விட்டு விட்டனா நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் சிறுத்தை அப்பகுதிக்கு வந்து இறந்து கிடந்த கன்றுக்குட்டியின் இறைச்சியை சாப்பிட்டு விட்டு மீண்டும் புதருக்குள் சென்று மறைந்தது இதனை கண்காணித்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தற்போது கூண்டு வைத்துள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம் உள்ள இடத்தை ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம் நேரில் ஆய்வு செய்து
சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு பத்து கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளதா
தெரிவித்தார்.
