Skip to content

”லியோ” டிக்கெட் கிடைக்காததால் தியேட்டரில் சுவர் ஏறி குதித்த ரசிகரின் கால் முறிவு..

  • by Authour

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ . திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ,சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.  இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் லியோ திரைப்படம் இன்று காலை வெளியானது. கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கு லியோ திரைப்படம் வெளியானது. ஆந்திராவில் அதிகாலை 5 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. லியோ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.

leo

இந்த நிலையில், லியோ படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் திரையிரங்கின் பின் பக்க சுவற்றில் ஏறி குதித்த விஜய் ரசிகருக்கு கால் முறிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் நடிகர் விஜயின் லியோ படத்தை பார்க்க டிக்கெட் கிடைக்காததால் திரையிரங்கின் பின் பக்க சுவற்றில் ஏறி குதித்த ரசிகரின் கால் முறிந்தது. இதனால் அந்த இளைஞர் வலியில் அலறி துடித்தார். உடனடியாக இளைஞரை மீட்ட காவல்துறையினர் அவருக்கு அறிவுரை கூறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!