நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது தென் மாநிலங்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. லியோ திரைப்படம் திருச்சி நகரில் மாரீஸ், சோனா-மீனா, காவேரி உள்பட 15க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. திருச்சியை பொருத்தவரை இந்த படத்திற்கான புக்கிங் நேற்று முன்தினம் ஆரம்பித்துகிட்டத்தட்ட முடிந்து விட்டது என்றாலும் இன்று மதியம் துவங்கி டிவிட்டரில் பிளாக்கில் டிக்கெட் விற்பனை துவங்கி பலரையும் ஆச்சர்யபடுத்தியிருக்கிறது. டிவிட்டரில் பிளாக் டிக்கெட் விற்பனை செய்யும் நபர்களை etamil தொடர்பு கொண்டு பேசிய போது 19ம் தேதி காலை முதல்
ஷோவிற்கான டிக்கெட் 1500 என்றும் மதிய ஷோவிற்கு 1200 என்றும் என வரிசையாக டிக்கெட்டின் விலையை கூறி நபர் இரவு ஷோவிற்கு 600 ரூபாய் என கூறி முடித்தார். டிவிட்டரில் பிளாக் விற்பனை குறித்து தியேட்டர் உரிமையாளரிடம் கேட்டதற்கு விஐபிகளின் பெயர்களை கூறியும் book my show ஆப் மூலமும் புக் செய்யும் நபர்கள் இவ்வாறு விற்பனை செய்கிறார்கள். இதை நாங்கள் எப்படி தடுக்க முடியும் என்றார். டிவிட்டரில் பிளாக் டிக்கெட் விற்பனை குறித்து திருச்சி போலீஸ் கவனிக்குமா?..