இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட சினிமா நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் லியோ.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ்,விஜய் கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான “மாஸ்டர்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற நிலையில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் இணையப் போகிறார் என்ற தகவல் வந்ததிலிருந்து படம் பற்றிய பல எதிர்பார்ப்புகளையும், பல கதைகளையும் நெட்டிசன்கள் உருவாக்கி இணையத்தில் தெறிக்க விட்டனர்.
அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் லியோ படத்தின் முதல் காட்சியை பட்டாசு வெடித்து ஆரவாரமாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி, லியோ படத்தைக் பார்க்க சென்றனர். லியோ திரைப்படம் வசூலில் சாதனை படைக்குமா ? விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை லோகேஷ் கனகராஜ் பூர்த்தி செய்துள்ளாரா ? என்று தஞ்சை மாவட்ட ரசிகர்கள் கூறிய கருத்தை தற்போது பார்க்கலாம்:
இது உண்மையாவே வித்யாசமான விஜய் படம் தான், படத்தில் எதிர்பார்க்காத பல சீன்கள் உள்ளது. படத்தில் சம்பவம் இல்லை படம் முழுவதுமே சம்பவமாக உள்ளது. கடைசி இரண்டு நிமிடத்தில் ஒரு முக்கியமான சீன் உள்ளது அதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.ஆனால் கண்டிப்பாக இது எல்.சி.யூ தான் படத்தில் நிறைய கேரக்டர்ஸ் இருந்தாலும் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தியது விஜய் தான், படத்தில் சீஜி வொர்க் தரமாக இருக்கு,இது முற்றிலும் அடி தடி, சண்டை காட்சிகள் நிறைந்த படமாக இருந்தாலும் ஒரு நல்ல தகப்பனாக விஜய் இப்படத்தில் நடித்துள்ளார். இது ஆயிரம் கோடியை அடித்தாலும் ஆச்சரிய பட வேண்டிய அவசியம் இல்லை முழுக்க முழுக்க படத்தில் சம்பவம் இருக்கு கட்டாயம் வந்து திரையில் பாருங்க. என்று படத்திற்கு வந்த அனைவரும் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்தனர்.