லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த, லியோ திரைப்படம் வருகிற 19,ம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது. லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி, இன்று நாகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், குடும்ப பெண்களுக்கு குடங்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.வெளிப்பாளையம் முச்சந்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி, விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்மன் பாதத்தில் விஜயின் படத்தை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அபிஷேகம் செய்த பிரசாதங்களை அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர். அதனை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் சுகுமாரன், சிவன் தெற்கு வீதியைச் சேர்ந்த 400,குடும்ப பெண்களுக்கு விலையில்லா குடங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். மேலும் அந்தப் பகுதியில் பள்ளியில் பயிலும் ஏழை
மாணவ, மாணவிகளுக்கு பேனா பென்சில் நோட்டு உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கி விஜய் மக்கள் இயக்கத்தினர் அசத்தினர். விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கிய, விலையில்லா குடங்களை, குடும்ப பெண்களும், கல்வி உபகரணங்களையும், சிறுவர், சிறுமியர் மகிழ்ச்சியுடனும், சந்தோசமாகவும் பெற்று சென்றனர்.