செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘லியோ’ . முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இணையவுள்ளார். ‘லியோ’ படத்தில் அவர் இணையவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏற்கனவே நயன்தாராவின் இமைக்கா நொடிகள்’ படத்தில் ‘வில்லனாக மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.