லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. உலகம் முழுவதும் 6,000 திரைகளில் வெளியான லியோ, முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்து திரையுலகை அதிரவைத்தது. இந்தாண்டு வெளியான இந்திய படங்களில் அதிகபட்ச முதல் நாள் வசூல் என்ற சாதனையை லியோ படைத்தது. இந்த நிலையில், முதல் 4 நாள்களில் ரூ.404 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இன்றும், நாளையும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை இருப்பதால் படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
