நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் 19ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்திற்கு 5 நாட்கள் தலா 5 காட்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் படத்தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம், லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் நேற்று வழக்கை விசாரித்து, இன்று தீர்ப்பளிப்பதாக கூறினார். இன்று காலை நீதிபதி அளித்த தீர்ப்பில், அதிகாலை 4 மணி காட்சியை அனுமதிக்க முடியாது. காலை 9 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு திரையிட அனுமதிப்பது தொடர்பாக அரசை அணுகுங்கள் என தீர்ப்பளித்தார்.