சென்னையில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றப்பட்டன. குன்றத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வரும் சந்தோஷ் என்ற மாணவன், நேற்று மாலை பள்ளி முடிந்தது சக மாணவர்களுடன் அரசுப் பேருந்தில் பயணித்தார். அப்போது, சந்தோஷ் பேருந்தின் முன்பக்க படியில் தொங்கியபடி பயணித்ததாக தெரிகிறது. பேருந்து குன்றத்தூர் தேரடி பகுதியை கடந்தபோது எதிர்பாராத விதமாக மாணவன் சந்தோஷ், பேருந்தின் படியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

பஸ்சில் பயணம் செய்து மாணவன் கால்களை இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஸ்சின் படியில் நின்று பயணம் செய்யாதீர்கள் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படும் நிலையில், அதனை கேட்காததால் மாணவர்கள், இவ்வாறு துயரத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதுபோல் இனி நடக்கக்கூடாது எனவும், இதனை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.