Skip to content
Home » காலுக்குள் புகுந்து சென்ற விஷ பாம்பு… உயிர் தப்பிய தொழிலாளி..

காலுக்குள் புகுந்து சென்ற விஷ பாம்பு… உயிர் தப்பிய தொழிலாளி..

கோவை விமான நிலையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றின் பின்புறம், கேக் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையிலே வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இங்கு ஒரு பாம்பு, தொழிலாளி ஒருவர் இருக்கையில் அமர்ந்த பொழுது, காலுக்கு அடியில் புகுந்து சென்று இருக்கிறது . பதற்றம் அடைந்த தொழிலாளி, பாம்பைப் பார்த்து திகைத்து நின்றிருக்கின்றார். அப்பொழுது உடனடியாக பாம்பு பிடி வீரர் ஸ்நேக் அமீனுக்கு தகவல் தந்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் அமீன், அறைக்குள் வந்த பாம்பு உலகத்திலேயே இரண்டாவது அதிக விஷம் உடைய, கண்ணாடிவிரியன் பாம்பு என்பதனை தெரிந்து கொண்டார். உடனடியாக அந்தப் பாம்பை 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பை பாதுகாப்புடன் பிடிக்க திட்டமிட்டு இருக்கின்றார். அதன் அடிப்படையில், பாம்பு ஒரு பைக்குள் அடைக்க, ஒரு சாக்கு பையை எடுத்துக் கொண்ட ஸ்நேக் அமீன், பிளாஸ்டிக் பாட்டிலை அறுத்து, சாக்குப் பையின் முகப்பில் கட்டி, பாம்பு உள்ளே செல்வது போன்று பையை இலகுவாக வடிவமைத்தார். அந்த பாம்பு செல்லும் இடத்தில் சாக்கு வைத்து, மெல்ல மெல்ல பாம்பை உட்செல்ல வைத்து, அந்த சாக்குக்குள் பாம்பு சென்றவுடன் பாதுகாப்பாக சாக்கு பையை கட்டினார். பாம்பு உட்புகுத்தப்பட்ட சாக்கின் முகப்பு பாதுகாப்புடன் கட்டப்பட்ட நிலையில், பாம்பின் சீற்றம் தணியாமல் சீறிக்கொண்டே இருந்த நிலையில் அதை பாதுகாப்புடன் கையாண்டனர். கொடிய விஷம் உடைய கண்ணாடிவிரியன் பாம்பு, கோயம்புத்தூர் வனத்துறை அதிகாரிகளின் வசம் ஒப்படைக்கப்பட்டு, அடர் வனப்பகுதியில் விடப்பட்டன . கொடிய விஷம் உடைய கண்ணாடிவிரியின் பாம்பு, பொதுமக்கள் பார்த்தால் உடனடியாக பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்து, அதனை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் எனவும், பாம்புகளை அடிக்கவோ அதனை பிடிக்கவோ கூடாது எனவும், பாம்பு பிடி வீரர் ஸ்நேக் அமின் தெரிவித்து இருக்கின்றார் . கண்ணாடி விரியன் பாம்பு பார்ப்பதற்கு மலைபாம்பு போன்று இருக்கும் நிலையில், பொதுமக்கள் கண்ணாடி விரியன் பாம்பை கையாள கூடாது எனவும், யாரேனும் பாம்புகளை பார்த்தால் அதனை சீண்டாமல் வனத்துறை, தீயணைப்பு துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தர வேண்டும் என பாம்புபிடிவீரர் ஸ்நேக் அமீன் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *