புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் முத்துக்குமார், கலையரசன். இவர்கள் மீது மாணவிகள் சிலர் கல்லூரி முதல் திருச்செல்வத்திடம் புகார் செய்தனர். தங்களிடம் பேராசிரியர்கள் தவறாக பேசுகிறார்கள் என அதில் கூறி இருந்தனர்.
இதுகுறித்து முதல்வர் திருச்செல்வம் விசாரணை நடத்தினார். இதற்கிடையே மாணவியிடம் விரிவுரையாளர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி முதல்வரிடம் அறிக்கை அளித்தனர். அதன்பேரில் கவுரவ விரிவுரையாளர்கள் இருவரையும் டிஸ்மிஸ் செய்து முதல்வர் திருச்செல்வம் உத்தரவிட்டார்.