ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது.அதைத் தொடா்ந்து, இஸ்ரேலையொட்டி எல்லை நிலைகளிலிருந்து லெபனான் ராணுவம் பின்வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘ஏபி’ செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது:
லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது. எனினும், அது முழுமையான படையெடுப்பாக இல்லாமல் குறிப்பிட்ட இலக்குகளில் மட்டும் நடத்தப்படும் துல்லிய தாக்குதலாக இருந்தது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்த தரைவழி ராணுவ நடவடிக்கையின்போது இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா படையினருக்கும் நேரடி மோதல் நடைபெற்றதா என்பது குறித்து தகவல் இல்லை. இரு தரப்பினரும் கடந்த 2006-ம் ஆண்டில்தான் கடைசி முறையாக நேரடியாக தரைவழி மோதலில் ஈடுபட்டனா் .
முன்னதாக, லெபனானில் உடனடியாக தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவிடம் இஸ்ரேல் தெரியப்படுத்தியதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்தது.
அந்த ராணுவ நடவடிக்கை முழு படையெடுப்பாக இருக்காது எனவும் 2006-ம் ஆண்டில் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான போரில் மேற்கொள்ளப்பட்டதைவிட மிதமான தாக்குதலாகவே இருக்கும். தங்கள் நாட்டு எல்லைக்கு அருகே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களின் உள்கட்டமைப்புகளை அழிப்பதற்காகவும் தங்கள் எல்லையோரப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக அமெரிக்காவிடம் இஸ்ரேல் கூறியுள்ளது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாத்யூ மில்லா் பின்னா் உறுதிப்படுத்தினாா்.
அதற்கு முன்னதாக, லெபனானில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கையில் தரைப் படையினரும் பயன்படுத்தப்படுவாா்கள் என்று அந்தப் படையினரிடம் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்ட் கூறினா். ஹிஸ்புல்லாக்களின் ஏவுகணைகளுக்கு அஞ்சி இஸ்ரேல் வடக்கு எல்லைப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ள பொதுமக்களை அவா்களின் இல்லங்களுக்கு அழைத்து வருவதற்காக தரைப் படையையும் சோ்த்து அனைத்து படைபலத்தையும் பயன்படுத்துவோம் என்று அவா் கூறினாா்.
‘தற்போது நடைபெற்று வரும் போரின் கவனம் வடக்கு நோக்கி நகரும் என்று ஒரு மாதத்துக்கு முன்னரே கூறியிருந்தேன். எல்லைப் பகுதியின் இப்போதைய நிலவரத்தை மாற்றிக் காட்டுவோம். அங்கிருந்து வெளியேறிய இஸ்ரேலியா்களை மீண்டும் அழைத்துவருவோம்’ என்று அவா் தெரிவித்தாா்.