தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பாக வருகிற ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நலிந்த ஏழை குடும்பங்களில் உள்ள சிறுவர்கள் சிறுமிகள் அவர்களுக்கு பிடித்த ஆடைகளை ஜவுளிகளுக்கு சென்று 1500 ரூபாய் மதிப்புள்ள ஆடைகளை வாங்கி 36 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கம் தலைவர் குப்பாஸ் அஹமது கபீர் தலைமையில் விழா நடைபெற்றது சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை குயில் சிட்டி லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் மற்றும்
முன்னாள் நகர் மன்ற தலைவரும் ஜஹவர் பாபு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இத்திட்டத்திற்கான செலவுகள் 75 ஆயிரம் சங்க உறுப்பினர் வளர்ச்சித் தலைவர் ஹாஜா நஸ்ருதீன் அவர்கள் ஏற்றுக் கொண்டார் விழாவில் சங்கத்தின் பவுண்டர் ஜகபர்சாதிக் லயன்ஸ் அபுபக்கர் அதிராம்பட்டினம் ஹானஸ்ட் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்களும் பட்டுக்கோட்டை குயின் சிட்டி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.