Skip to content

கொரோனா பரவல்…. வழக்கறிஞர்கள் ஆன்லைனில் வாதிடலாம்…. உச்சநீதிமன்றம்

  • by Authour

இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. இதன்படி, ஒரே நாளில் 4,435 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179-ல் இருந்து 23,091 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இன்று கூறும்போது, கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன என்ற பத்திரிகை செய்திகளை நாங்கள் பார்த்தோம். அதனால், வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராவது மற்றும் வீட்டில் இருந்தபடி பணியாற்றுவது ஆகிய இரண்டு முறைகளையும் பயன்படுத்தலாம். நீங்கள் ஆன்லைன் வழியே வழக்கில் ஆஜராகி வாதிட்டாலும், நாங்கள் வழக்கு விசாரணையை நடத்துவோம் என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!