Skip to content
Home » திருச்சியில் திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…..

திருச்சியில் திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…..

ஜனநாயகத்திற்கு எதிராகவும் அரசியலமைப்புக்கு எதிராகவும்,  மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மத்தி்ய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு  நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக  அனைத்து வழக்கறிஞர்களும் இதனை கண்டித்து வருகிறார்கள்.

3 புதிய சட்டங்களை அமல்படுத்தியதை கண்டித்து திமுக சட்டத்துறை சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் இன்று  கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மத்திய மாவட்ட திமுக  வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

ஜாக் கமிட்டி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், திமுக தெற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக மகளிர் வழக்கறிஞர் பிரிவினர், முசிறி, துறையூர், மணப்பாறை மற்றும் லால்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த திமுக வழக்கறிஞர் அணியினர்  ஆர்ப்பாட்டத்தில்  திரளாக பங்கேற்றனர். 

ஆா்ப்பாட்டத்தின் மத்தியில்,  திருச்சி மத்திய மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொறுப்பாளர் ஓம் பிரகாஷ்  கூறியதாவது :  மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது .மேலும் அனைத்து முதல்வர்களிடமும் இது சம்பந்தமாக மனு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டி இந்த புதிய மூன்று சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

நாளை சென்னையில் இதற்காக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் நடக்கிறது.  தமிழகம் முழுவதும் இருந்து  வழக்கறிஞர்கள் திரளாக பங்கேற்கிறார்கள்.  அதனைத் தொடர்ந்து எட்டாம் தேதி திருச்சியில் அனைத்து வழக்கறிஞர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி  நடைபெற உள்ளது. இந்த போராட்டங்களை தொடர்ந்து இந்த மூன்று புதிய சட்டங்களும் ரத்து செய்யப்படவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் .

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *