பெஷாவர் மூத்த வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான அப்துல் லத்தீப் அப்ரிடி பெஷாவரில் ஐகோர்ட்டு வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் துப்பாக்கியால் ஆறு முறை சுடப்பட்டார். உடனடியாக அவரை பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்துல் லத்தீப் அப்ரிடி பாகிஸ்தான் ராணுவத்தை கடுமையாக விமர்சித்து வந்தார். சிவில் உரிமைகள், ஜனநாயகம், மக்களின் உரிமைகளுக்காக, குறிப்பாக மத்திய அரசின் ஆதிக்கத்தில் உள்ள பழங்குடியினப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்காக போராடி வந்தார். 1943 ல் பிறந்த அவர், 1968 ல் பெஷாவர் பல்கலைக்கழகத்தில் தனது எல்எல்பி பட்டம் பெற்றார். மேலும் அவா் வழக்கறிஞராக 50 ஆண்டுகலுக்கு மேல் பணியாற்றி உள்ளார்.2020 ல் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் சங்க தலைவராக தேர்த்நு எடுக்கப்பட்டார். பாகிஸ்தான் பார் கவுன்சிலின் துணைத் தலைவராகவும் உறுப்பினராகவும் இருந்தார்.
