தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி, டிஜிபிசைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபிடேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகர காவல் ஆணையர்கள் உள்ளிட்ட காவல் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், குற்ற வழக்குகளில் எடுக்க வேண்டிய மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.