அலங்காநல்லூரில் இன்று விமரிசையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பிற்பகல் 3 மணிக்கு பின்னர் திடீரென சிலர் மைதானத்திற்கு வெளியில் இருந்து போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். கல் வீசிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.