Skip to content

ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தமே…லதா ரஜினி….

  • by Authour

கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த்தின்  மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான் திரைப்படத்தை தயாரித்த மீடியா ஒன் நிறுவனம்  ஆட் பீரோ என்ற நிறுவனத்திடம் கடன் பெற்றது. இதற்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்திட்டு இருந்தார்.ஆனால் ஒப்பந்தத்தின் படி தயாரிப்பு நிறுவனம் நடக்காததால் புகாரின் அடிப்படையில் லதா ரஜினிகாந்த் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இதுதொடர்பான மூன்று வழக்குகளை கர்நாடக நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், ஒரு வழக்கை மட்டும் விசாரிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனுதாக்கல் செய்த நிலையில் விசாரணையை  பெங்களூரு நீதிமன்றமே மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதன் காரணமாக வழக்கு விசாரணைக்காக  லதா ரஜினிகாந்த் நேற்று பெங்களூரு சென்றிருந்தார்.

rajini

tn

இந்நிலையில் சென்னை போயஸ் தோட்டத்தில் நிருபர்களை சந்தித்த லதா ரஜினி… ரஜினி அரசியலுக்கு வராதது ரொம்ப வருத்தம்; அவரை தலைவராகத்தான் பார்த்தேன்; அவர் அரசியலுக்கு வராதது எனக்கு வருத்தம்அரசியலுக்கு வராவிட்டாலும் அவரால் இயன்றததை செய்து கொண்டுதான் உள்ளார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!