ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஜி.மதுகுள மண்டலத்தில் ( கேஜிபிவி) கஸ்தூர்பா காந்தி பெண்கள் வித்யாலயா, இது பெண்களுக்கான உண்டு உறைவிட அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் அரசு விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில் நேற்று அவர்கள் பள்ளிக்கு சற்று தாமதமாக வந்தனர்.
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளை இரண்டு மணி நேரம் வெளியில் நிற்க வைத்த விடுதி வார்டன் பிரசன்னா குமாரி அவர்களின் 15 பேருக்கு தலை முடியை கத்தரித்து தண்டனை கொடுத்தார்.
மேலும் இது தொடர்பாக வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் வார்டன் மாணவிகளை மிரட்டி இருக்கிறார். இந்த தகவல் இப்போது வெளியாகிய நிலையில் அந்த வார்டனை பணியிடை நீக்கம் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.