நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தை முடித்து விட்டு ‘ஜெய் பீம்’ ஞானவேல் இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் இறுதிவாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தீபாவளி, புதுவருடம், பொங்கல் போன்ற பண்டிகையின் போது ரஜினிகாந்த் தனது பேரன்களுடன் இருக்கும் மகிழ்ச்சியானத் தருணங்களை புகைப்படம் எடுத்து ஐஸ்வர்யா ரஜினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்வார்.
ஒரு தாத்தாவாக ரஜினிகாந்த் தனது பேரன்களிடம் எப்படி நடந்து கொள்வார் என்றும் அவர்கள் ரஜினி மீது எந்தளவிற்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்றும் லதா ரஜினிகாந்திடம் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், “அவர் கணவர், அப்பா என்பதை விட தாத்தாவாக சிறப்பானவர் என்று சொல்வேன். ஐஸ்வர்யா, செளந்தர்யா குழந்தைகளாக இருந்தபோது அவர் சினிமாவில் பிஸியாக இருந்தார். அதனால், குழந்தைகளாக இருந்தபோது அவர்களிடம் செலவிட முடியாத நேரத்தை தனது பேரன்களுடன் மகிழ்ச்சியாக செலவிட்டு வருகிறார்.