Skip to content

சென்னையில் தரையிறங்கிய உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம்…

  • by Authour

உலகத்திலேயே மிகப் பெரிய சரக்கு விமானம் திமிங்கலம் வடிவிலான, “ஏா்பஸ் பெலுகா”. இந்த விமானம் சென்னை விமானநிலையத்திற்கு, நேற்று இரவு 9.30 மணிக்கு வந்தது. இது குஜராத்தில் இருந்து, தாய்லாந்து செல்லும் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் தரையிறங்கி, எரி பொருள் நிரப்பியது. பின்னர் சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை ஒன்றரை மணிக்கு மீண்டும் விமானம் புறப்பட்ட சென்றது. ஏற்கனவே, கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி, இதேபோல் எரிபொருள் நிரப்புவதற்காக முதல்முறையாக சென்னை வந்தது.
சென்னை விமான நிலைய ஊழியர்களை பெலுகா விமானம் வெகுவாக கவர்ந்தது. விமான பணியாளர்கள், ஏன் சில விமானிகள் கூட இந்த ஏர்பஸ் பெலுகா விமானத்தை வந்து பார்த்து சென்றனர். ஏர்பஸ் பெலுகா விமானம் டேக் அப் மற்றும் லேண்டிங்கின் போது அதிக ஒலி எழுப்பும். நேற்றும் இந்த விமானம் தரையிறங்கிய போது அதிக சத்தம் வந்தது. இந்த விமானம் எரிபொருள் இல்லாமலே 86,500 கிலோ எடை கொண்டது. 864.36 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம், சராசரியாக 150 டன் வரை சரக்கு ஏற்றி செல்லும். ஏர்பஸ் பெலுகா 56.15 மீட்டர் நீளம், 44.84 நீள இறக்கைகள் கொண்டது ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!