Skip to content

திருச்சி ஏர்போட்டில் கட்டு கட்டாக வௌிநாட்டு பணம் பறிமுதல்…

  • by Authour

வெளிநாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம், வெளிநாட்டு பணம் மற்றும் பொருட்கள் கடத்தி வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.   திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 4 பயணிகள் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூபாய் 19 லட்சத்தி 5 ஆயிரத்தி 200 மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் (சவுதி ரியால்) பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 4  பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை  செய்து வருகின்றனர்.

error: Content is protected !!