கரூர் பசுபதிபாளையம் ஏவிபி நகரை சேர்ந்தவர் முருகானந்தம். ராயனூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் போர் மேனாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஆட்சிமங்கலத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி ஒருவரிடம் வணிக மின் இணைப்பில் இருந்து, வீட்டு மின் இணைப்புக்கு மாற்றி தர ரூ.1500 லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கூலித் தொழிலாளி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் சாருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்களின் ஆலோசையின் பெயரில் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க ராயலூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகானந்தத்தை கைது செய்தனர். கரூர் மின்வாரிய அலுவலகத்தில் போர் மேன் ஒருவர் ரூபாய் ஆயிரம் லஞ்சம் பெற்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.