நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. வரும் 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்பிருந்து அந்த காட்சியை இணையதளத்தில் ஒளிபரப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. எனவே நாம் அனைவரும் வீட்டில் இருந்தபடியே நிலவில் இறங்கும் காட்சியை கண்டுகளிக்கலாம்.
சந்திரயான் 3 நிலவில் இறங்கும் காட்சி நேரடி ஒளிபரப்பு ….. இஸ்ரோ தகவல்
- by Authour
