கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் தோகைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று விட்டுவிட்டு மிதமான கனமழை பெய்தது. தோகைமலை பகுதியில் மற்றும் நேற்று 7 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ள நிலையில் பில்லூர், முத்த கவுண்டம்பட்டி ஆகிய ஊர்களை இணைக்கும் பில்லூர் பிரிவு ரோடு அருகே உள்ள தரைப்பாலத்தினை மூழ்கி எடுத்தவாறு மழைநீர் வெள்ளம் செல்கிறது. இதனால் பில்லூர் மற்றும் முத்த கவுண்டம்பட்டி ஆகிய இரு ஊர்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. முத்தம் கவுண்டம்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள்
அருகில் உள்ள ஊர்களுக்கு செல்வதற்கு இந்த ஒரு பாதை மட்டுமே உள்ளது. தற்போது அந்த தரை பாலத்தை மூழ்கியவாறு மழைநீர் அதிக அளவில் செல்வதால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். மேலும் அதிக அளவில் மழைநீர் செல்லும் நிலையில் அதன் ஆபத்தை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சிலரும் அதனை கடந்து செல்கின்றனர்.