திருச்சி மாவட்டம், லால்குடியில் அமைந்துள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.
லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் ஏழு முனிவர்களுக்கு அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றுஅழைக்கப்படுகிறது.
இக்கோயிலின் பங்குனித் திருவிழா கொடியேற்றம் மார்ச் 15ம் தேதி தொடங்கியது. இரவு சோமாஸ்கந்தர் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை தினசரி காலை பல்லக்கு புறப்பாடும், தினசரி இரவு 7 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் புறப்பாடும், திருவீதி உலாவும் நடைபெற்றது.
விழாவின் 9 ம் நாளான இன்று காலை சுவாமி எழுந்தருளி கலை நயமிக்க 75 அடி உயரமுள்ள மிகப் பழமையான மரத்தாலான தேரில் தேரோட்டம் நடைபெற்றது.
கோவில் இணை ஆணையர் லட்சுமணன், ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், லால்குடி நகராட்சி தலைவர் துரை மாணிக்கம், ஆணையர் குமார், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவசிவா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நித்யா மற்றும் கோயில் பணியாளர்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.தேரோட்டத்தையொட்டி லால்குடி காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். தேரோட்டத்தைெயாட்டி ஆங்காங்கே தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர், தண்ணீர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.