திருச்சி மாவட்டம், லால்குடி திமுக MLA வாக இருப்பவர் செளந்தர பாண்டியன் இன்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தனது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அழைப்பு இல்லை என பதிவிட்டிருந்தார்.. அந்த பதிவில்…
திருச்சி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்று யாரும் என்னுடன் பேசக்கூடாது தொடர்பு கொள்ள கூடாது என்று அதிகாரம் செலுத்தி வந்தவர் இப்போது வெளி மாவட்ட செயலாளர்கள் வெளி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இடத்தில் சௌந்தரபாண்டியன் கிட்ட பேசுறியா என்றும் இன்னும் ஒரு படி மேலே சென்று அமைச்சர்கள் இடத்தில் கூட உங்களை சௌந்தரபாண்டியன் வந்து பார்த்தானா என்று விசாரிக்கின்றாராம் முதன்மையானவர் மூத்தவர் கட்சிக்காரர்கள் இடத்தில் அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சௌந்தரபாண்டியனுக்கு பத்திரிக்கையாச்சா அப்படின்னு விசாரிக்கிறது . இதுதான் இப்ப இவருக்கு முக்கியமான வேலைகள் நாங்கள் என்ன வேலுமணி தங்கமணி என்றும் கட்சியையும் முதல்வரையும் விமர்சனம் செய்பவர்கள் உடனுமா தொடர்பில் உள்ளோம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் இப்போது நடந்த தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கூட #மாண்புமிகு தலைவர் முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தியும் எங்கள் மீது வன்மத்தை தினம் தினம் திணிப்பதே இவரின் (முக்கியமான பணியாக உள்ளது…
இன்றைய சௌந்தரபாண்டியனின் பதிவில் மறைமுகமாக அமைச்சர் நேருவை குறிப்பிட்டள்ளதாக திமுகவினர் தரப்பில் கூறப்படுகிறது.