திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலகத்தில் லால்குடியில் ரூ 1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் வார சந்தை அமைக்க கலந்தாய்வு கூட்டம் நகர்மன்ற தலைவர் தலைமையில் நடைப்பெற்றது.
லால்குடி நகராட்சியில் வார சந்தை நடைபெற்று வருகிறது. வார சந்தை அமைந்துள்ள இடத்தில் போதிய வசதி குறைவானதால் இப்பகுதி மக்கள் வார சந்தையை விரிவுபடுத்தியும், போதுமான வசதிகளோடு அமைத்து தர வேண்டும் என தமிழக நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று வார சந்தைக்கு நிதி ஒதுக்கீடு செய்ததின் பேரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ 1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் வார சந்தை அமைப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம் லால்குடி நகராட்சி கூட்டமன்ற வளாகத்தில் நகர்மன்றதலைவர் துரை மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் குமார், துணைத் தலைவர் சுகுணா ராஜ் மோகன் முன்னிலை வகித்தனர். நகர் மன்ற உறுப்பினர்கள் ராதிகா முருகன், நவநீதா சுகுமார், மற்றும் சமுக ஆர்வலர் ஜின்னா ஜாகிர் உசேன், வார சந்தை ஏல குத்தகைதாரர்கள், கடைகுத்தகைதாரர்கள் கலந்து கொண்டனர்.