திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் அரியலூர் ரயில் நிலையங்கள் திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களாகும். இந்த நகரங்களின் ரயில் நெட்வொர்க் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் அமிர்த பாரத்
ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் லால்குடி மற்றும் அரியலூர் ரயில் நிலையங்கள் உள்ளன. தெற்கு ரயில்வே ஒப்பந்தம் விடப்பட்டு, பல்வேறு உள்கட்டமைப்பு மாற்றங்களுக்கான பணிகள் ரூ. 6.27 கோடி (லால்குடி) மற்றும் ரூ. 5.24 கோடி (அரியலூர்) என ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்படுத்தும் பணிக்கான மாதிரி படம் வௌியிடப்பட்டுள்ளத.