திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேட்டுப்பட்டி விஏஓவாக பணிபுரிந்து வருபவர் அம்புரோஸ். பட்டா மாறுதலுக்காக அந்த பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் விஏஓ அம்புரோசிடம் வாரிசு சான்றிதழை கொடுத்துள்ளார், வாரிசு சான்றிதழில் சந்தேகம் ஏற்பட்டதால் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் அம்புரோஸ் விசாரித்த போது அது போலி சான்றிதழ் என சந்தேகம் அடைந்ததால் லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் போலீசார் மார்டினை விசாரணை செய்தபோது லால்குடி அருகே வாளாடி அக்ரகாரம் கே.என்.நகர் 1-வது தெருவை சேர்ந்த குமார் என்கிற குமரவேல் ( 46) என்பவரிடம் சான்றிதழை வாங்கியதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் குமாரவேலிடம் விசாரணை செய்தபோது…. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகராக செயல்பட்டு பல்வேறு முறைகளில் ஈடுபட்டு வந்துள்ளதால் அப்போது உள்ள வட்டாட்சியர் கவனத்திற்கு சென்றதால் இவரை அலுவலகத்துக்கு உள்ளே மற்றும் வெளியே வரக்க கூடாது என கூறியுள்ளார். இதனால் குமாரவேல் போலி முத்திரைத்தாள், பிறப்பு இறப்பு சான்றிதழ் மற்றும் அரசு அலுவலர்களின் பதித்த முத்திரை ஆகியவற்றை போலியாக தயாரித்து பலருக்கும் போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்த விபரம் தெரியவந்தது. இத்தகவலை தெரிந்த போலீசார் குமரவேலை கைது செய்தது பொதுமக்களை ஏமாற்றுதல், அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துதல், மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை செய்தபோது விஏஓ, தாசில்தார், துணை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளின் 17 வகையான போலி சீல்கள், போலி வருவாய்த்துறை ஆவணங்கள், விலை உயர்ந்த செல்போன், ஸ்டாம்பேடு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.