முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் லால்குடி எம்எல்ஏ சவுந்தரராஜன் அறிக்கையில் கூறியதாவது.. திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதிகுட்பட்ட ஆர். வளவனூர், கே.வி. பேட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆர். வளவனூர் ஊராட்சி ரெத்தினங்குடி உப்பாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட ரூ.10.91 கோடியும் , ஆலங்குடிமஹாஜனம் ஊராட்சி கே. வி. பேட்டை நந்தையாற்றில் உயர் மட்டபாலம் கட்ட ரூ. 10.19 கோடியும் இன்று நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தொகுதி மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதற்கு உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஊரகவளர்ச்சிதுறை அமைச்சருக்கும் தொகுதி மக்களின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.