Skip to content
Home » திருச்சி ஜல்லிக்கட்டு…. போலீஸ் தடியடி…. வீடியோ….

திருச்சி ஜல்லிக்கட்டு…. போலீஸ் தடியடி…. வீடியோ….

  • by Authour

லால்குடி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 59 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி – 600க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட பங்கேற்று காளைகளை அடக்கி வருகின்றனர் – மாட்டின் உரிமையாளர் மாடை பிடிக்கக் கூடாது என மாடுபிடி வீரர்களை தாக்கியதால் போலீஸ் லேசான தடியடி நடத்தினர்.

திருச்சி மாவட்டம், லால்குடி தெற்கு வீதியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் லால்குடி தெற்கு வீதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வழக்கம். இந்நிலையில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 59 ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இங்கு நடைபெற்று வருகிறது.

முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்பு வாடிவாசலில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்பு வாடிவாசலில் அனுமதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போட்டியை லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், அரியலூர்,புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பகுதியிலிருந்து 600 க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர்  ஜல்லிக்கட்டு காளைகள்  விடப்பட்டது. வாடி வாசலை கடந்து சென்ற காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.

காளைகளை அடக்கும் வீரர்களுக்கும்,  அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

லால்குடி சர க காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போட்டியின் போது ஒரு காளையின்  உரிமையாளர் அவரது காளையை பிடிக்கக் கூடாது என  வீரர்களை தாக்கியதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தபோது காவல் உதவி ஆய்வாளரும்   நிலைதடுமாறி   கீழே விழுந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *