கரூரில் ரஜினி நடித்த லால் சலாம் திரைப்படம் 2 திரையரங்குகளில் வெளியானது – ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாட்டம்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் இன்று வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து திரைப்படம் இன்று வெளிவந்தது. கரூர்
மாநகரில் உள்ள அமுதா திரையரங்கம் மற்றும் அஜந்தா ஆகிய இரண்டு திரையரங்குகளில் இன்று வெளியானது. இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் திரையரங்கம் முன்பு கட்-அவுட்டுக்கு பட்டாசு வெடித்து, கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.
இன்று வெளியான லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் குறைந்த அளவான காட்சிகளே நடித்துள்ளதால் திரைப்படத்தை காண ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததால் குறைவான ரசிகர்களே வந்தனர்.