ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் இணைந்து பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவர்களுடன் காமெடி நடிகர் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த படத்தில் பயிற்சியாளராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
லைக்கா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் தனது பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டார். இதையடுத்து மற்ற நடிகர்களின் காட்சிகளின் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் தனது பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இதை தனது மனைவி இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.